அனைவருக்கும் வணக்கம்… எனது பெயர்.க. கனகராஜ். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். குருஜி திரு.DR.B.P.பிரணவ்.. ஐயா அவர்கள் நடத்திய பிரம்ம முகூர்த்த சாதணா பயிற்சியின் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களிள் அடியேனும் ஒருவன்.14.07.2024 முதல் 03.08.2024 நாள் வரை 21 நாட்கள் ஐயா அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இந்த பயிற்சியில் உடலை சீர்படுத்த உடற்பயிற்சி உயிர் ஆற்றலை மேம்படுத்த பிராணயாம பயிற்சி மனதை ஒழுங்குப்படுத்தி காரிய வெற்றி பெற மன சாதனைப் பயிற்சி நாம் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் நினைத்த செய்த காரியங்களால் ஏற்பட்ட பாவ சாப தோசங்களாள் ஏற்பட்ட தீய கர்மாவை அகற்றிவிட்டு நேர்மறையான வாழ்க்கைக்கு உயர்வு தரக்கூடிய ஒரு புது வாழ்க்கையை வடிவமைக்க கூடிய (விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்களே அது போல்) ஒரு ரகசிய தாந்திரீக ஆன்மீக பயிற்சியும்… பிறகு நாம் செய்த தாந்திரீக சாதனைக்கு வலுவூட்டக்கூடிய தெய்வ ஆற்றல் நிரப்பக்கூடிய மந்திரங்களை தலைசிறந்த மந்திரமான காயத்ரி மந்திர பிரயோகமும் பின்பு சகல விதமான தீய கர்மாக்களை விரட்டக்கூடிய சகல விதத்திலும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய மிருத்தியஞ்சேய மந்திரத்தையும் ஜெபம் செய்து பிரயோகிக்கும் முறையும்… இறுதியாக நமது சாதனை மூலமாக தீய கர்மாக்களை முற்றிலுமாக அகற்றி நான் நினைத்ததை அடைய நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள ரகசிய செயல் தியான முறையையும் கற்றுக் கொடுத்தார். மேலும் நவகிரக தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நம் அன்றாடம் வாழ்வியல் முறையில் கடைபிடிக்கக் கூடிய எளிய அதே சமயத்தில் மிகுந்த சக்தி வாய்ந்த பிரயோக சாதனை முறைகளையும் கற்றுக் கொடுத்தார். மேலும் ஆன்மீகப் பயிற்சியின் உச்சமாக திகழக்கூடிய நமது உடலில் ஆன்மீகத்தின் திறவுகோலாக இருக்கக்கூடிய ஒரு ரகசிய இடத்தையும் அந்த இடத்தை அடையும் முறையும் அங்கு நினைத்த காரியத்தை செயல்படுத்த நாம் செய்ய வேண்டிய முறையையும் கற்றுக் கொடுத்தார்.
ஐயா அவர்களின் பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
- எளிய அணுகுமுறை.
- எல்லோரும் இரவில் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணம் கூறி பயிற்சிக்கும் முறை.
- பயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவரிடமும் மானசீகமாக தனித்துவமாக கவனித்து வழிநடத்தும் முறை.
- தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் முழுமையாக ஆன்மீக பலனை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மிகுந்த அக்கறையுடன் வழிகாட்டுதலுடன் நடந்து கொள்ளும் முறை.
- ஒவ்வொரு பயிற்சியும் ஏன் செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் இதை செய்வதனால் என்ன பலன் உண்டாகும் என்று விளக்கம் கூறி பயிற்சிக்கு முறை.
- ஹட யோகம் ராஜ யோகம் தந்த்ர யோகம் மந்திர யோகம் ஆகிய நான்கு யோக பயிற்சிகளில் உள்ள முக்கிய சாராம்சத்தை தொகுத்து ஒரே தொகுப்பாக பயிற்சிக்கும் முறை.
- எல்லாவற்றிக்கும் மேலாக ஐயா அவர்களின் உபவாச தெய்வமான ஸ்ரீ காயத்ரி தேவி ஸ்ரீ மிருத்ஞ்செயஞ்சய தேவர்…. மற்றும் திரு அகத்தியர் மற்றும் திரு புலிப்பாணி முனிவர்களின் நேரடி சீடரான ஐயா அவர்களின் சூட்சும குருநாதர் திரு பண்டிட் ஜீ கண்ணையா யோகி அவர்களின் ஆசிர்வாதமும் தெய்வீக பக்கத்துணையும் பாதுகாப்பும் ஐயா அவர்களின் குரு மண்டலத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் சூட்சுமமாக மாணவர்களாகிய நம்மிடம் செயல்படுவதை உணர முடிகிறது. எனவே அனைவரும் இந்த பயிற்சியை ஐயா அவரிடம் முறையாக கற்று நமது கர்மவினை யாவும் நீக்கி இம்மையிலும் மறுமையிலும் நர்கதி பெற அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய நேர்மையான ஒரு ஆன்மீக பயிற்சி தொகுப்பாகும் இந்த பிரம்ம முகூர்த்த சாதனை. என்பதை அடியேன் உறுதியுடன் கூறுகிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்.
இப்படிக்கு.
அக்கரைப்பட்டி ஜோதிடர் .G. கனகராஜ்.