ஐயா, வணக்கம். எனது பெயர் கனகராஜ்… 🙏🙏
இன்று காலை தாங்கள் நடத்திய பிரம்ம முகூர்த்த சாதனை பயிற்சியில்…
வயிற்றின் அசைவுகளில் உணர்வை நிறுத்தி, ஸ்தூல தேகத்தை சீரமைக்க வேண்டும் என்றும், அதன்பிறகு மூச்சில் உணர்வை நிறுத்தி, ப்ராண தேகத்தை சீர்படுத்த வேண்டும் என்றும். அதன்பிறகு தாங்கள் கூறிய ரகசிய இடத்தில் உணர்வை நிறுத்தி, மனோதேகத்திற்குள் பிரவேசித்து, அங்கு செய்யும் தியான வாக்கியங்களை ஆழ்மனதிற்குள் சொல்லியவாறு, உண்மையாக காரியம் நடந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதே உணர்ச்சியை போல உணர்ந்து, ஆழ்மனதை காரியப்படுத்த வேண்டும். பிறகு அங்கு காரியப்படுத்திய அதே உணர்வோடு உள்ளே சென்ற வழியிலேயே மீண்டும் மூச்சிற்குச் செல்ல வேண்டும். பிறகு வயிற்றுப் பகுதியை கவனித்து, அந்த உணர்வை ஒவ்வொரு அணுவிலும் பரவவிட வேண்டும். அவ்வாறு காரியப்படுத்துவதால், நம் ஆழ்மனதில் விதைத்த விதை (செயல்) நிஜவாழ்க்கையில் நடக்க ஆரம்பிக்கும் என்ற அரிய யோக நுட்பத்தை கற்றீர்கள். அதற்குத் தாங்கள் கூறிய உதாரணங்களும் புரிந்துகொள்ளும்படியாக அருமையாக இருந்தது. மேலும், செவ்வாய்க் கிரகத்தின் அருளை எளிமையாக பெறுவது எப்படியென்று நுட்பத்தையும் கற்றீர்கள். தங்களுக்குமிக்க நன்றி, ஐயா. 🌹🌹💐💐🙏🙏