“குருஜி அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம். அடியேன் கனகராஜ்… 🙏🙏
அய்யா, தாங்கள் கற்றுக் கொடுக்கும் சூரிய நமஸ்காரம் மற்றும் உடற்பயிற்சி, பிராண ஆற்றலை சீரமைத்து ஒழுங்குபடுத்தி, பிராண ஆற்றலை பலப்படுத்தும் பிராணாயாம பயிற்சி, மற்றும் தீய கர்மாக்களை அகற்றவும், நல்வினைகளை சித்தத்தில் பதியவைக்கவும், தாங்கள் கொடுக்கும் பயிற்சிகள் மற்றும் காரிய சித்தி தியானம், காயத்ரி மந்திரம் ஜெபம், மகா மிருத்தியுஞ்சயர் ஜெபம் ஆகியவை தங்களின் வழிகாட்டுதலுடன் கடைப்பிடிக்க ஆரம்பித்தவுடன், எனது உடல் மற்றும் மனம் அனைத்தும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் திகழ்கிறது. சில நாட்களிலேயே நடைமுறை வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் தெரியவருகிறது, அய்யா. நான் பயிற்சி செய்யும் இடம் கூட நல்ல நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது.
மேலும், நேற்று தன்னிடம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய யோக நுட்பம் என்னவென்றால்… மனதை போகவிட்டு உணர்வு சாட்சியாக நின்று பார்வையிட்டால் அது மனோபயணம் என்றும்… அதே மனத்துடன் உணர்வும் ஒன்றிணைந்து பயணம் செய்யும்போது அது ஆன்மா பயணம் என்றும்… இதுவே சூட்சுமலோக சஞ்சாரத்திற்கு அடிப்படை பயிற்சி என்பதையும்… அதனால் நாம் செய்யக்கூடிய பிராணாயாம பயிற்சியாகட்டும், தியான பயிற்சியாகட்டும், அனைத்தும் எண்ணம், செயல்கள், அனைத்தும் உணவுடன் ஒன்றி பயிற்சி செய்யவேண்டியது மிக மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொண்டேன். இந்த நுட்பத்தை கற்பித்த தங்களுக்குப் பல்லாயிரம் நன்றி அய்யா. நன்றி, வணக்கம், அய்யா.. 💐💐🌹🌹🙏🙏”